Thursday, January 5, 2012

முதல் அருங்காட்சியகம்!

இருபத்தியொரு வருட திருநெல்வேலி வாழ்க்கையிலும் அதன் பிறகு அவ்வபோது வந்து சென்ற போதும் கேள்விப்படாத ஒரு விஷயம் இம்முறை என் காதில் விழுந்தது. பாளையம்கோட்டை பள்ளி/கல்லூரி சோலைகளுக்கு அருகில் அமைந்திருக்கும் அரசு அருங்காட்சியகம் தான் அது! எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இதுவரை ஒரு அருங்காட்சியகம் கூட சென்ற நினைவு இல்லை! தொடக்கம் சொந்த ஊரில் இருக்கட்டும் என்றோ என்னவோ இது நாள் வரை தள்ளிச் சென்ற அந்த 'அருங்காட்சியகம்' விசிட் இம்முறை நிறைவேறியது!


அருங்காட்சியகமா? திருநெல்வேலியிலா? என்று ஆச்சர்யபடுபவர்கள் (அட நானும் முதல்ல இப்டி தான் "Shock" ஆனேன்!) சமதானபுரம் அடுத்த ஸ்டாப்பில் (மார்க்கெட் மார்க்கம்) இறங்கி அங்கே இருக்கும் ஆட்டோ டிரைவரிடம் கேட்டால் சொல்வார்கள். கேள்விப்பட்டவர்களுக்கு - Water Tank பின்புறம் இருக்கிறது இந்த அருங்காட்சியகம்!


காலை பதினொரு மணி அளவில் அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைகையில் முதலில் கண்ணில் பட்டது அந்த பெரிய டைனாசர் உருவ பொம்மை தான்! சிறிய அருங்காட்சியகம் என்பதாலும் பெரிய கூட்டம் இல்லை என்பதாலும் அங்கே வேலை பார்பர்வர்களிடம் பேச்சு கொடுக்க தோன்றியது. 'ரதி' என்ற என் பட்டியின் வயதை ஒத்த ஒருவர் தான் நுழைவுச்சீட்டு கொடுத்தார் (ரூ. 5). புகைப்படம் எடுக்க மற்றொரு சீட்டும் தரப்பட்டது (ரூ. 20). வரவேற்பறையில் அவர் நுழைவுச்சீட்டு கொடுக்கும் அந்த அறையிலேயே அருங்காட்சியகம் ஆரம்பமாகிறது. Simple புகைப்படங்கள் - பாணதீர்த்தம், ஐந்தருவி, குற்றாலம், சங்கரன்கோயில் சுவர் ஓவியம் என ஆரம்பித்து பத்தமடை பாய், சுடுமண் பொம்மைகள் என் நீள்கிறது!






அதைத்தொடர்ந்து அருங்காட்சியக வெளியீட்டு புத்தகங்கள், நூல் நூற்கும் இராட்டு, குற்றாலம் மற்றும் டைனாசர்களின் மாதிரி (தமிழ்ல அத எப்டி சொல்றதுன்னு தெரியல - சும்மா பொம்மைங்க தாங்க). மானின் தலை மட்டும் (கொம்போடு தான்), எருமையின் தலை மட்டும் என தொங்கவிடப்பட்டு முடியும் அந்த ரூம்-ன் வலது பக்கத்தில் திரும்பினால் பழைய நகைப்பெட்டி, கல்லாபெட்டி, படிமங்கள் (Bronze) அதில் அரிசி/நெல் அளக்கும் உழக்கு என அருங்காட்சியத்தில் சற்று பழைய விஷயங்கள் ஆரம்பமாயின! இந்த லிஸ்டில் எனக்கு தெரியாதது "மரக்கால்"!




மன்மதன், ரதி மற்றும் அர்த்தநாரீஸ்வரர் புகைப்படங்களைத் தொடர்ந்து உலோக கைவினைப் பொருட்கள் (அதில் இருக்கும் சீப்பு [Comb] என்னை ஆச்சர்யப்பட வைத்தது!), அதை கடந்து வந்தது நாணயக் குவியல்! பழைய நாணயங்களின் தொகுப்பாக (Maximum Original Coins) சில புகைப்படங்களும்! அந்த புராண நாணயங்களின் லிஸ்ட் இதோ (மேலும் சில Coinகள் [அருங்காட்சியகத்தில் இல்லாதது, புதியது] பார்க்க இங்கே கிளிக்கவும்!):

கி.மு. 400 (சாதமனார்), அதன் பின் கி.பி. 100 முதல் - கணிஷ்கர், வாசுதேவர், சத்ரபர், சாதபர்னி, குப்தர், பாண்டியன், கேரளர், ராஜபுத்ரர், சாளுக்யர், டில்லி சுல்தான் அலாவுதீன் முகமது ஷா, ஷேர்ஷா, அக்பர், ஜகாங்கிர், விஜய நகரம் கிருஷ்ணதேவ ராயர், மைசூர் சுல்தான் ஹைதர் அலி, திப்பு சுல்தான், கடைசியாக East India Company!







தொடர்ந்து வீட்டு அலங்காரப் பொருட்கள், மர சிற்பங்கள், விடுதலை போராட்ட வீரர்களின் புகைப்படங்கள், சிறுவர் பொருட்கள் என முடிகிறது அந்த ரூம்! வெளியே சென்றால் தோற்பாவைக் கூத்து, பழியர் பழங்குடிப்பொருட்கள், காட்டு நாயக்கர்களின் பொருட்கள், ஆயுதங்கள், கல் ஆயுதங்கள், வரலாற்றிற்கு முற்பட்ட மன்பாண்டகள், முதுமக்கள் தாழி (Urn Burials), தனியக்குதிர், இசைக்கருவிகள் என முடிகிறது கீழ் தளம்! (இதைப்பற்றி அதிகம் எழுதி மொக்கை போடாமல் புகைப்படங்கள் சில கீழே!) என்னைப் பொருத்தவரை இதோடு அருங்காட்சியகமும் முடிகிறது! First Floor-ல் உள்ள பத்திக் ஓவியம், கலம் காரி ஓவியம் மட்டும் தான் பார்க்கும்படி! மற்றவை அனைத்தும் புகைப்படங்களே!












I liked these lines very much!


புகைப்படங்களின் குவியலில் ஒரு சில நம் கவனத்தை ஈர்ப்பது என்னவோ உண்மை தான்! Bimbetca Rockart, கழுகுமலை Jain Sculptures, Ginjee Fort, ஸ்ரீபுரம் வெல்லூர் Golden Temple என்று நாம் பார்க்க முடியாத சில நல்ல புகைப்படங்களும் உள்ளன! தொடர்ந்து கடற்பாசிகள், உலர் தாவரங்கள், தாவரவியல் பொருட்கள், மர வகைகள், கடல் விசிறிகள், பவளங்கள், துளையுடலிகள் (Sponges), முட்தொலிகள் என (புகைப்படங்கள் அல்ல) Most Probably நாம் பார்த்த விஷயங்கள் அல்லது Science Center-ல் பார்க்ககூடிய விஷயங்கள் தான்!

2 comments:

  1. ///DSC04195.jpg/// என்பது வளை எறி என்ற நமது பண்டைத்தமிழரின் ஆயுதமே!!!இது தாக்கும் இலக்கைத் தாக்கிவிட்டு திரும்பி எறிந்தவரிடமே வரும் பூமராங் என்ற சாதனமே ஆகும்.கைக்கோளர்கள் என்ற ஒரு போரிடும் இனமே பண்டைத் தமிழர்களிடம் இருந்தது.அத்தமிழர்கள் முள் எரி,முள் கைக்கோல்,தண்டம்,வளை எரி,கயர் எறி(கயரில் பிணைக்கப்பட்டிருக்கும் முள் எறி,முள் குண்டு,குண்டு,எறி இரும்புக் குண்டு ஆகியவை இவற்றுள் அடங்கும்),ஆகியவற்றை போரில் பிரயோகிப்பதில் வல்லவர்கள்.இவற்றால் ஆயுத சேதம்,மற்றும் செலவு இல்லாமல் எதிரியை அழிப்பார்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்
    http://machamuni.blogspot.com/
    http://kavithaichcholai.blogspot.com/

    ReplyDelete
  2. தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete