Wednesday, November 16, 2011

சென்னை அனுபவங்கள்!


சென்ற பதிவில் குறிப்பிட்டது போல் - இதோ என் சென்னை அனுபவங்கள்!




என்னுடைய பால்ய சிநேகிதன் குமாருடன் சென்னை வந்து சேர்ந்த போது சற்று நேரம் என்னால் நம்ப முடியவில்லை – சென்னைல இப்டி கூட Climate இருக்கும் என்று! கோயம்பேட்டிலிருந்து வேளச்சேரி செல்ல D70 பிடித்து, அங்கே கடலென நின்ற traffic-ஐ கடந்து (நீந்தி) எங்கள் வண்டி வேளச்சேரி வந்து சேர, கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேரம் ஆனது! வியாழன் அன்று வந்து சேர்ந்த நான், அன்று முழுவது பெய்த மழையாலும், என் நண்பன் வீட்டில் கிடைத்த வெகுமதிகளினாலும், எங்கேயும் வெளியே வர முடியவில்லை! வெள்ளி அன்றும் கிட்டத்தட்ட அது போன்ற ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் இரவு வரை வெளியே வர முடியவில்லை.

வெள்ளி இரவு நண்பன் சேதுவை ரயில் நிலையம் சென்று திருநெல்வேலிக்கு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ்-இல் வழியனுப்பிவிட்டு எழும்பூரிலிருந்து பார்க், பின் அங்கிருந்து வேளச்சேரி வரை செல்லும் மின்சார ரயில் பிடித்து, மீண்டும் வீடு வந்து சேர்வதற்கு கிட்டத்தட்ட பத்தரை மணி ஆனது! சனியன்று காலை வேளச்சேரி அருகில் உள்ள “Born Babies” கடைக்குள் புகுந்து மற்றொரு நண்பன் விக்னேஷ்-க்கு பிறந்த குழந்தைக்காக Gift வாங்குவதில் சிறிது நேரம் செலவானது!

அப்படியே அவனுடன் ஆயிரம் விளக்கு பகுதி வரை சென்று அவனுடைய “Hard Disk” replacement செய்துவிட்டு வருகையில் அது என் கண்ணில் பட்டது. நான் சென்னை வந்து சேர்ந்தவுடன் என் நண்பன் சேது சொன்ன முதல் செய்தி: அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த இடத்தில் இருக்காது என்றும், ஒரு முறையாவது பார்த்துவிடு என்றும் தான்! ஆயிரம் விளக்கு சென்றுவிட்டு வருகையில் அது கண்ணில் பட, நண்பனுக்கு இருந்த அவசரத்தில் நூலகம் உள்ளே செல்லமுடியாவிட்டாலும் வெளியே இருந்தபடியே ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன்! அடுத்த முறை சென்னை வரும்போது பார்க்கமுடியுமோ முடியாதோ!

(சென்னை சென்று பார்க்க முடியாதவர்களுக்காக கீழே உள்ள படம்)




இரவுப்பொழுது வெட்டியாகக் கழிந்தாலும், காலையில் ஒரே பரபரப்பு தான். பதினொரு மணிக்கு பூனே வரை செல்லும் பேரூந்தை பிடிப்பதற்கு ஒன்பதரை மணிக்கு வேளச்சேரியில் இருந்து மறுபடியும் D70 பிடித்து கோயம்பேடு வந்து செருவத்ற்கே பத்தேமுக்கால் ஆகிவிட்டது! அங்கிருந்து ஆம்னி Bus Stand செல்லும் இடம் எங்கிலும் தண்ணீர்! முட்டு வரை ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் கிட்டத்தட்ட நீந்தி செல்கையில் பாதசாரிகள் நடக்கும் பாதையில் பெரியதோர் குழி! ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் குழி இருக்கும் இடமோ யாருக்குத் தெரியும்? அத்தனை இடம் இருக்கையில் மிகச்சரியாக அந்த குழிக்குள் விழுந்த முதல் ஆள் நான் தான்!

பிறகு இரண்டு மூன்று பேர் வந்து கை கொடுத்து குழியில் இருந்து என்னைக் காப்பாற்றி(!) வெளியே எடுக்க, கைபேசி மற்றும் கையில் வைத்திருந்த பை, கால்சட்டை என சகலமும் நனைந்துவிட்டது! பேரூந்தை பிடிக்கச்செல்லும் பரபரப்பு காணமல் போய் எப்படிடா இப்டி போயி bus-ல ஏறுவது என்ற எண்ணம் தான் மேலோங்கியது! ஒரு வழியாய் பேரூந்தை பிடித்து, உள்ளேயே கால்சட்டை மாற்றி – அதற்கும் முன்னதாய் ஆம்னி Bus Stand வரை செல்லும் நீரோடையில் நீந்தி என்று ஞாயிறு அன்று காலை முழுவதும் “Adventure” தான்!

No comments:

Post a Comment