Saturday, February 23, 2013

மணிமுத்தாறு!


அண்ணனுக்கு திருமணம் என்று நெருங்கிய நட்பு வட்டாரங்கள் அனைவரையும் அழைத்தாயிற்று (ஒரு வேளை இதை படிக்கும் உங்களை அழைக்கவில்லை என்றால் மன்னித்து விடுங்கள்... வேண்டுமென்று செய்யவில்லை!). திருமணம் பழனியில் என்பதாலும், பெண் வீட்டார் திருமணம் என்பதாலும் நண்பர்களை நேராக Reception-க்கு திருநெல்வேலி வரச் சொல்லியாயிற்று. எவனுக்கு Phone பண்ணி கூப்பிட்டாலும் “நா கண்டிப்பா வருவேன் மச்சி-னு” சொல்லி 10 ரூம் புக் பண்ண வச்சி, நல்ல வேளை கடைசி நேரத்துல 5 ரூம கேன்சல் பண்ணி, 3 ரூம்-க்கு மட்டும் ஆட்கள் சேர்த்து (6 பேர் தாங்க!) 2 ரூம்-க்கு தண்டமா வாடகை குடுத்து ‘லைட்டு-க்கா’ ரத்த கண்ணீர் விட்டாலும், புக் பண்ண “Tavera” கரெக்ட் டைம்-க்கு வந்து என் வயித்துல பால வாத்தான்! One of the biggest occasion in my life-னு Reception-க்கு முந்தின நாள், சேர்ந்த 5 நண்பர்களோட (அதுல ஒருத்தன் லேட்டா வந்ததினால அவன விட்டுவிட்டு நாங்கள் கிளம்பியாயிற்று) குற்றாலம் பார்க்கலாம்-னு கெளம்பியாச்சு. வண்டியில் பாட்டு கேட்டுகிட்டே கிட்டத்தட்ட 1 மணி நேரம் கழிச்சி குற்றாலம் வந்து சேர்ந்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை! அடப்பாவிகளா! ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் “Terror”-ஆ மழை மாப்ள, குற்றாலத்துல செம சீசன்-னு சொன்ன என்னோட நண்பன கொலவெறியோட தொரத்தி தொரத்தி கொல்லனும் போல இருந்தது! சரி, அப்டியே 5அருவியும் பாத்துடுவோம்-னு அங்க போனா தண்ணி நெய் மாதிரி வழிந்துகொண்டிருந்தது! அதுக்கும் ஒடம்பு பூரா சோப்பு தேச்ச கோஷ்டிங்களோட கூட்டம் வேற! (குற்றாலத்துல குளிச்சே தீருவேன்னு இதுல என்னோட நண்பன் ஒருத்தன் போய் குளிச்சது(!) கொடுமை!) நானும் மருத மலை படத்துல வர்ற வடிவேலு மாதிரி (திருடனை தப்பிக்க விட்டதுக்கு அப்புறம் வர்ற சீன்) முழிச்சிக்கிட்டு மணிமுத்தாறு போலாம் மச்சி, இன்னும் டைம் இருக்கு – அங்க கண்டிப்பா தண்ணி வரும்-னு Convince பண்ணி, அங்க இருந்து ஒரு ஒன்னரை மணிநேரம் (நடுவில் அரை மணி நேர உணவு இடைவேளை வேறு!) வண்டியில் A/C-யிலும் வியர்த்து சென்றடைந்தோம்.


திருநெல்வேலிக்காரன் மானத்தை நல்ல வேளையாக மணிமுத்தாறு காப்பாற்றியது! மானத்தை காப்பாற்றியதோடு மட்டுமல்லாமல் எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தையும் கொடுத்தது! மணிமுத்தாறு அருவி செல்லும் வழியில் ஒரு செக் போஸ்ட் உண்டு. ஆள் அரவமில்லாமல் அது வேறு பயமுறுத்தியது – ஒரு வேளை இங்கயும் தண்ணி இல்லை-னா மக்கள் நம்ம கிட்ட இருந்து தண்ணி எடுத்துடுவாங்களே-னு பயம் வேற! Parking-ல ஒரு ஈ காக்கா கூட இல்ல (சரி, சரி, ஒரு பத்து பதினஞ்சி குரங்கு இருந்திச்சி)! இறங்கி நடந்து போனால் “சோ” என்ற சத்தமே என் காதில் தேனாய் பாய்ந்தது! மட மட-வென டிரஸ்ஸ மாத்திட்டு குடு குடுவென ஓடிப் போய் பார்த்தால், அருவியில் ஒரே ஒரு Couple மட்டும் தான்! ஒரு பய இல்ல! தண்ணீரும் இரண்டு நாள் பெய்த மழையில் ஏதோ சொல்லும் அளவு விழும் என்று பார்த்தால் நன்றாகவே விழுந்தது! நானே ராஜா நானே மந்திரி என்று யாருக்காவும் காத்திருக்காமல், யாருக்கும் விட்டும் கொடுக்காமல், எங்களுக்காக மட்டுமே கொட்டியது போன்ற ஒரு உணர்வுடன், மணி போவதே தெரியாமல் குளிப்பது, அருவியின் முடிவில் படுத்து இளைப்பாருவது, மீண்டும் குளிப்பது என்று நண்பர்களுடன் நானும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றேன்! Couple-ம் எங்களை பார்த்த சில நிமிடங்களிலேயே கிளம்பிவிட்டனர்! கருமம் புடிச்ச Camera-வில் Charge இல்லாததால் சில புகைப்படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது! (மற்றவை கைபேசியில் எடுத்தவை) அவ்வபோது இளைப்பாற நண்பர்கள் சிலர் ‘தம்’ அடித்து, சூடு ஏற்றி, மீண்டும் வந்து குளித்து என்ஜாய் செய்தனர்! மேற்கொண்டு அடி (தண்ணீரில்) வாங்க முடியாது என்ற முடிவு எல்லோருக்கும் வந்த பிறகு தான் அந்த இடத்தை (மனமே இல்லாமல்) காலி செய்தோம்! வருகிற வழியில் சில புகைப்படங்களும் எடுத்தோம். உடும்பு, செந்நாய், குரங்கு என்று (சின்ன லிஸ்ட் தான், வர்ற வழியில் பார்த்தது) சில மிருகங்களையும் பார்த்தோம். இதோ சில புகைப்படங்கள் உங்களுக்காக.






Can you see 'Udumbu' on the above picture?

நன்பேண்டா!



Dedicating this post to my dear Brother! Happy Married Life Anna!

No comments:

Post a Comment