Monday, July 28, 2014

உறவு...

காதல் என்றேன்
இல்லை என்றாய்.
தோழன் என்றேன்
இல்லை என்றாய்.
சகோதரன் என்றேன்
இல்லை என்றாய்.
நான் யார் என்றேன்
தெரியவில்லை என்றாய்.

——-

காதல் என்றேன்
இல்லை என்றாய்.
தோழி என்றேன்
இல்லை என்றாய்.
சகோதரி என்றேன்
இல்லை என்றாய்.
நான் யார் என்றேன்
நான் தான் என்றாய்.

———

உறக்கம் என்றேன்
கனவு என்றாய்.
புத்தகம் என்றேன்
ஆசிரியர் என்றாய்.
மாலை என்றேன்
தேநீர் என்றாய்.
காதல் என்றேன்
வெட்கப்பட்டாய்.

———-

மாமா என்றாய்
அப்பா என்றேன்.
அத்தை என்றாய்
அம்மா என்றேன்.
மகள் என்றாய்
தாய் என்றேன்.
நான்? என்றாய்
மகன் என்றேன்.

~பாஜி.

Friday, July 25, 2014

ஒரு மாலை…

அழுதது.
வலித்தது.
பின் குளிர்ந்தது.
இறுதியாய் நகைத்தது.
கீழ்வானம் சிவக்கையில், மேகம் – அழுதது.
என் மார்பின் மேல் வந்து விழுந்த
அந்தப் பெரிய மழைத்துளி பட்டதும் – வலித்தது.
அடுத்த கணமே, துளி வந்து விழுந்த இடம் – குளிர்ந்தது.
அலுவலக அலுப்பில் கடுகடுவென்றிருந்த
அந்த வாய் – நகைத்தது.

————————
PS:
இது என் முதல் கவிதை முயற்சி.