Saturday, August 9, 2014

நானும், அவளும்...

வெள்ளிக் கம்பிகளைப் போல வந்தாய்
என் கைகள், மார்பு, முகம் என
நீ வந்து விழுந்த இடங்கள் குண்டூசி குத்தியது போல்.
வலித்தாலும், சிரிக்கிறேன்!

சென்றமுறை நீ வந்தபோது
என்னைக் கொஞ்சம் தான் நனைத்தாயோ?
என்ன அவசரம் உனக்கு
இம்முறை முழுதாய் உன் பாசத்தைக் காட்டு!

என் காதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் இசை
வாய் வழி ராகம் பாடும்போது என்றுமே சிறப்பாய் இருந்ததில்லை.
நீ என்னை நனைத்த பின் வந்த குளிரில்
பற்கள் கிடுகிடுத்தபடி, புதியதோர் கீதம் படைத்தது!

உன்னை வெறுக்கும் அந்த சிலர்
இசை ஞானம் இல்லாதவர்கள் போலும்!
கனியிருக்கக் காய் கவர்ந்தது போல்
மழையிருக்க அடை தேடுகிறார்கள்!

தேநீர் கடையில் தேங்கி நிற்கும் மக்களைப் பார்த்தால்
சிரிப்பு தான் வருகிறது!
மழையின் பொருட்டு அங்கே நின்று குடிக்கிறார்கள்.
முட்டாள்கள்! மழை நின்றபின் அல்லவா குடிக்கவேண்டும்!

மழையே உன்னை
நீ வா என்று மரியாதை இல்லாமல் அழைக்கவில்லை
அதென்ன நீ வா-க்குப் பின் போ இல்லை என்கிறாயா
இன்பத்தை எவனாவது போ என்பானா?


PS:
மழை அவளாய் இருக்கக் கூடாதா?

No comments:

Post a Comment